-->

how to apply smart card online


கீழே கொடுக்கப்பட்டுள்ள  வெப்சைட்டின் மூலம் உங்களுடைய புதிய ஸ்மார்ட் கார்டு ரேஷன் card புதிதாக apply செய்ய முடியும் நீங்கள் உங்களுடைய ஸ்மார்ட் கார்டு வீட்டிலிருந்தே அப்ளை செய்து கொள்ளலாம்

இந்த வெப்சைட்டில் வந்தவுடன் நீங்கள் உங்களுக்கு தேவையான மொழியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் முதலில் தமிழ் லாங்க்வேஜ் இல் இருக்கும் நீங்கள் உங்களுக்கு தேவையான மொழியை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும்

நீங்கள் புதிய ரேஷன் கார்டு ஸ்மார்ட் கார்டு அப்ளை செய்ய அதில் புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க என்ற ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும் அதன் பின்னர்  புதிய ரேஷன் கார்டு ஸ்மார்ட் கார்டுக்கு அப்ளை செய்வதற்கான  விண்ணப்பம் ஓபன் ஆகும்

அதில் உங்களுடைய பெயர்  உங்களுடைய முகவரி கொடுக்க வேண்டும் இதில் உங்களுடைய பெயர் மற்றும் முகவரியை இங்கிலீஷ் மட்டும் தமிழில் கொடுக்க வேண்டும் இரண்டு மொழிகளிலும் உங்களுடைய பெயர் மற்றும் முகவரி கொடுக்க வேண்டும்

நீங்கள் உங்களுடைய முகவரி மற்றும் முகவரி கொடுத்த பின்னர் குடும்பத் தலைவரின் புகைப்படத்தை அப்லோட் செய்ய வேண்டும் இந்த போட்டோ 5MB  குறைவாக இருக்கவேண்டும் அதிகமாக இருந்தால் எடுத்துக் கொள்ளாது உங்களுடைய குடும்பத் தலைவரின் புகைப்படம் அப்லோட் செய்த பின்னர் அந்தப் புகைப்படம் உங்களுக்கு தெரியும் அதை ஒரு முறை பார்த்து சரியான  புகைப்படமா என பார்த்துக்கொள்ள வேண்டும்

அதன் பின்னர் உங்களுடைய மாவட்டத்தை தேர்ந்தெடுக்கவேண்டும் தேர்ந்தெடுத்த பின்னர் உங்களுடைய வட்டம் தெரிந்தெடுக்க வேண்டும் அதன் பின்னர் உங்களுடைய கிராமத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் உங்களுடைய அஞ்சல் குறியீட்டு என்னை கொடுக்க வேண்டும் அதன் கீழ்  ஜி மெயில் ஐடியை கொடுக்கவேண்டும் ஜி மெயில் ஐடியை கொடுத்து பின்பு உங்களுடைய மொபைல் நம்பரை  கொடுக்க வேண்டும்

பின்பு உங்களுடைய ஸ்மார்ட் கார்டு ரேஷன் கார்டில் உறுப்பினரை புதிதாக சேர்க்க ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது அதை கிளிக் செய்து உங்களுடைய உறுப்பினரை முதலில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு செய்ய முடியும் அதன் பின்னர் உங்களுடைய ஸ்மார்ட் கார்டு ரேஷன் கார்டு அட்டையின் types தேர்ந்தெடுக்க வேண்டும் பின்னர் உங்களுடைய குடியிருப்பு சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும் 

குடியிருப்பு சான்றிதழுக்கு தேவையான டாக்குமெண்ட்

01. கரண்ட் பில் அட்டை

02. பேங்க் பாஸ்புக்

03. ஆதார் கார்டு

04. கேஸ் சிலிண்டர் அட்டை

05. பாஸ்போர்ட்

06. தொலைபேசி கட்டணம்

07. குடிசை மாற்று வாரியத்தின் சான்றிதழ்

08. வாக்காளர் அடையாள அட்டை

மேலே கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழ் தேர்ந்தெடுக்க வேண்டும்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அந்த சான்றிதழின் நகல் அப்லோட் செய்ய வேண்டும் அந்த சான்றிதழில் file அளவு 1MB குறைவா இருக்க வேண்டும் சான்றிதழை அப்லோட் செய்த பின்னர் உங்களுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளதா என்று அதில் தெரிவிக்க வேண்டும் உங்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் இருந்தால் நீங்கள் அதனுடைய கஸ்டமர் ஐடி கொடுக்க வேண்டும் பின்னர் நீங்கள் எந்த நிறுவனத்தில் கேஸ் சிலிண்டர் பெறுவீர்கள் என்று அந்த நிறுவனத்தின் பெயரை தெரிவிக்க வேண்டும் அதன்பின் உறுதிமொழி ஆப்சன் செலக்ட் செய்ய வேண்டும் அதன்பின் பதிவு செய் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் அதன் பின்னர் உங்களுடைய மொபைல் நம்பருக்கு ஒரு registration code வரும்


 அந்த registration code மூலம் உங்கள் ஸ்மார்ட் கார்டு ரேஷன் கார்டு எந்த நிலையில் உள்ளது என்று செக் செய்ய முடியும் அதன் பின்னர் உங்களுடைய அந்த ஸ்மார்ட் கார்டு ரேஷன் கார்டு உங்களுடைய வீடு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்


                      Apply website link click here

Post a Comment

1 Comments