-->

தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் பொதுமுடக்க தளர்வுகள் என்ன? lockdown 7.0

 



தமிழகத்தில் வரும் 31-ஆம் தேதியுடன் பொது முடக்கம் முடிவடைய உள்ள நிலையில் அதற்கு பிறகு என்ன மாதிரியான தளர்வுகள் இருக்கும் அரசு மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது இதுவரை ஆறு முறை பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டு முறை தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன lockdown 6.0 எனப்படும் ஆறாவது பொது முடக்கம் வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது


தற்போது உள்ள நிலவரப்படி மாவட்டங்களில் வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு E பாஸ் பெற்று தான் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு தொடரும் என கூறப்படுகிறது


கடந்த மாதம் தமிழகத்தில் 6 மண்டலங்களாக பிரித்து மண்டலங்களுக்கும் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது அதன் பின்னர் தோற்று பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது தளர்வுகள் 3.0 மாவட்டங்களுக்கு பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது


தொழில் நிறுவனங்களுக்கு தற்போது இருக்கும் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் மாலை 6 மணிக்கு கடைகள் மூடப்பட வேண்டும் என்ற உத்தரவு இரவு 8 மணி வரை நீட்டிக்க பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது ஜூலை மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடைபிடிக்கப்பட்ட முழுவதும் ஆகஸ்ட் மாதமும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது


தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 7000 நோய்த்தொற்று ஏற்படுவதால் மருத்துவ நிபுணர்களின் கருத்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது பொது முடக்கம் முடிய உள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை என்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார் வியாழக்கிழமை மருத்துவக் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார் எனவே மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் ஆகஸ்ட் 1முதல் கட்டுப்பாடுகள் மற்றும் தரவுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது


கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மனைவி நடிகைகள் நயன்தாரா ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பிரபலங்களுக்கு ஹைதராபாதில் ஏரி நீர் பிடிப்பு நிலத்தை பல கோடிக்கு விற்பனை செய்ததாக ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மீது புகார் எழுந்துள்ளது

நடிகை வனிதா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது லாக்டோன் டைமில் திருமண நிகழ்ச்சி நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது


Post a Comment

0 Comments